சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், அவர் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவான முறையில் பதிலளித்துள்ளார். 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 போட்டித்தேர்வு, நாளை (ஜூலை 12) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 22 லட்சத்துக்கும் […]
தேர்வுக்கான கேள்விகளை நீங்களே தயாரித்து விடை எழுதிக்கொள்ளலாம் என்ற ஒரு வித்தியாசமான வினாத்தாளை மாணவர்களுக்காக ஐஐடி கோவா தயாரித்துள்ளது.தற்போது இந்த வினாத்தாளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால்,பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் பாடத் தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில்,கோவாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) மிகவும் தனித்துவமான தேர்வு முறையை அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது […]