கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது ஒருமித்த குரலாக உள்ளது. இந்த தெருநாய் கடியின் மூலம் ஒரு நபர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கோவை அரசு மருத்துவமனையிலேயே அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி ராம்சந்தர் எனும் நபர் வெறிநாய் கடி […]
திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை விரட்டுகின்றன. குறிப்பாக, நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கி ஓடும் பள்ளிக் குழந்தைகளை துரத்திச் சென்றுகடிக்கின்றன. நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தான் உகந்தது என்ற […]