அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போன் கிடைத்துள்ளது. மும்பையைச் சேர்ந்த லோகேஷ் தாகா என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார்.ஆனால், மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போனைப் பெற்றுள்ளார். இதனையடுத்து,லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,”வணக்கம்,நான் நான்கு கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தேன்.அதற்காக ரூ.396 கட்டணமாக வசூலிக்கப்பட்டன.மேலும், கட்டணம் செலுத்திய பின்பு அதற்கான ஆர்டர் நம்பர் 406-9391383-4717957 ஐப் […]