அடடா!அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ரெட்மி நோட் 10 மொபைல்போன்..!

A Mumbai native who ordered a mouthwash on Amazon has got a Redmi Note 10 mobile phone to replace the mouthwash.

அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போன் கிடைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த லோகேஷ் தாகா என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார்.ஆனால், மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போனைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து,லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,”வணக்கம்,நான் நான்கு கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தேன்.அதற்காக ரூ.396 கட்டணமாக வசூலிக்கப்பட்டன.மேலும், கட்டணம் செலுத்திய பின்பு அதற்கான ஆர்டர்  நம்பர் 406-9391383-4717957 ஐப் பெற்றேன்.

இந்நிலையில்,டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் மவுத்வாஷிற்குப் பதிலாக எனக்கு ரெட்மி நோட் 10 கிடைத்துள்ளது.எனவே,இந்த ரெட்மி மொபைல் போனை திரும்பக் கொடுக்க முடிவு செய்து செய்தேன்.ஆனால்,அமேசான் ஆப் வழியாக திரும்பக் கொடுக்க முடியவில்லை.

இருப்பினும்,பார்சலின் முன்பக்கத்தில் உள்ள பேக்கேஜிங் லேபிளில் என்னுடைய பெயர் இருந்தது.ஆனால்,அதன் உள்ளே இருந்த பில்லில் தெலுங்கானாவைச் சேர்ந்த வேறு ஒருவருடைய பெயர் இருந்தது.எனவே ,சம்மந்தப்பட்டவரிடம் மொபைல்போனை ஒப்படைபதற்காக நான் அமேசானிற்கு இ-மெயில் செய்துள்ளேன்”,என்று தெரிவித்திருந்தார்.

unknown node