தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,”தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவில் உப்பாற்று ஓடை உள்ளது.இந்த ஓடைக்கு அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2016 அக்டோபர் மற்றும் 2015 நவம்பர் மாதங்களில் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு […]