வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறும். பொதுமக்கள் அனுமதிப்பது குறித்து குடமுழுக்கு நடைபெறும் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ஜன.23ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.