வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் 3 குழந்தைகளை விஷம் கொடுத்து ஜெயக்குமார் என்பவர் கொலை முயற்சி செய்துள்ளார் . இவருக்கு உள்ள அஸ்வினி, கொடைசெல்வி, காவியா என்ற 3 குழந்தைகளை கொல்ல முயற்சி செய்துள்ளார். நிலத்தகராறு காரணமாக ஜெயக்குமார் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 80க்கும் அதிகமானோா் லாாியில் இந்த சோதனைச் சாவடியை கடக்க முற்பட்டுள்ளனா். அப்போது பணியில் இருந்த செம்மரம் கடத்தல் தடுப்பு பிாிவு காவலா்கள் அந்த லாாியை மறித்து சோதனை செய்துள்ளனா். அந்த […]
வேலூர்: சிப்காட் பகுதியில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தோல் தொழிற்சாலை உரிமையாளர் விஜயகுமா என்பவரை போலீசார் இன்று ஜாமினில் விடுவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.
வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில் ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர் இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.