2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப். 2024-ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மீண்டும் அமரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற அதிபர் தேர்தலில் போட்டிருக்கிறேன் என்றும் பிரச்சனைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் வெற்றி குறித்து தனது பிரச்சாரம் இருக்கும் எனவும் கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், […]
கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பதற்கு அவசரமாகத் தேவையான மூலப்பொருள் உடனடியாக இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் தொலைபேசியில் பேசினார், சமீபத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் காரணமாக இந்திய மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.அமெரிக்கா இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று ஜேக் சல்லிவன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் எங்கள் மருத்துவமனைகள் சிரமப்பட்டதால் […]
அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், “நிச்சியமாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்” என கூறினார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து, அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். அதில் பைடன் 306 வாக்குகளும், டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றார். ஜோ பைடன், […]
இந்த ஆண்டு இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தேவையான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியவுடன் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும் திட்டத்துடன் டிரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி: “தடுப்பூசி தொடர்பாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. […]
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அதிபர் டிரம்ப், “பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்” என தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், 4 நாட்களுக்கு பின் கடந்த திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். […]