டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கவுள்ளதால், தற்போதைய பணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீதர் வேம்பு, “நிறுவனத்தின் ‘தலைமை விஞ்ஞானி’ என்ற முறையில் தான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் […]
ZOHO: தஞ்சாவூரை சேர்ந்த டிரோன் தயாரிக்கும் யாழி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு முதலீடு செய்ய உள்ளார் என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த தினேஷ் பால்ராஜ் மற்றும் அனுகிரஹா எனும் தம்பதி நெதர்லாந்தில் பணிபுரிந்து விட்டு தற்போது தமிழகத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தஞ்சாவூரை தளமாக கொண்டு டிரோன் தயாரிப்பு நிறுவனத்தை இந்த தம்பதி தொடங்கியுள்ளனர். யாளி ஏரோஸ்பேஸ் (Yali Aerospace) எனும் இந்த நிறுவனமானது, ராணுவம் […]
சாஸ் நிறுவனமான ZOHO பொறியியல், தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் 2,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது. பல ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், ஒரு மென்பொருள்-ஒரு-சேவை (SaaS) நிறுவனம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஊழியர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க சென்னையை தளமாகக் கொண்ட ஜோஹோ கார்ப் திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களுடன், ஜோஹோ இந்தியா […]