bsnl increase net speed [file image]
BSNL : பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களுடைய நெட்டை ஏவ்வாறு வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பலரும் பிஎஸ்என்எல் (BSNL) சிம்மை உபயோகம் செய்துகொண்டு வருகிறார்கள். இந்த சிம்மில் மற்ற சிம்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறது.குறிப்பாக 28 வேலிடிட்டி பிளான் மற்ற சிம்களில் 239 ரூபாய் இருக்கும் ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) சிம்மில் அந்த பிளான் 139 ரூபாய்க்கே கிடைத்துவிடும்.
இப்படி மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் இருப்பதன் காரணமாகவே பலரும் இரண்டாவது சிம் ஆகவும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சிம்மை உபயோகம் செய்யும்போது ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் நெட்வொர்க் மிகவும் மெதுவாக கிடைப்பது தான். ஆனால், நம்மளுடைய போனின் அமைப்பில் (Settings) சென்று ஒன்றை மாற்றினால் நெட்வொர்க் மிகவும் வேகமாக கிடைக்கும்.
அது என்ன Settings அதனை எப்படி மாற்றவேண்டும் என்பதனை விவரமாக பார்க்கலாம். முதலில் பிஎஸ்என்எல் வைத்து நெட்வொர்க் பயன்படுத்துபவர்கள் முதல் ஸ்லாட்டில் வைத்தே பயன்படுத்தவேண்டும். அதன்பிறகு சிம்கார் அமைப்பிற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் APN அமைப்பிற்கு செல்லவேண்டும். ஏற்கனவே, அதில் ஒரு பாய்ண்ட் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை விட்டுவிட்டு கீழே புதிய பாயிண்டை உருவாக்கு என்பதனை தேர்வு செய்யவேண்டும்.
இதனை எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் கீழே கொடுத்து இருக்கும் பாயிண்டை பார்த்து அப்படியே உங்களுடைய போனில் நிரப்பி கொள்ளுங்கள்.
NAME – Bsnl GigaNet Max
APN – bsninet
Proxy- Not Set
Port – Not Set
User Name- SpeedBot GigaNet Max
Password – Not Set
Server – www.bsnl.co.in
MMSC – 404
MNC- 43
Authentication type – PAP or CHAP
APN type – defaultsupl
APN protocol – IPv4/IPv6
APN roaming protocol -Pv4/IPv6
Bearer- LTE, HSUPA, UMTS,HSDPA, EDGE, GPRS,
MVNO type – None
இதனை எல்லாம் உங்களுடைய போனில் சரியாக நிரப்பிய பிறகு நாம் எல்லாத்தையும் சரியாக நிரப்பி இருக்கிறோமா என்பதை பார்த்துக்கொள்ளவும். அதன்பிறகு கீழே இருக்கும் சேமிப்பு வசதியை க்ளிக் செய்துவிட்டு இந்த APN பாயிண்டை சேமித்து வைத்து கொள்ளுங்கள். பின் உங்களுடைய போனை ஒருமுறை ஆப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்து நெட்டை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக இந்த அமைப்பை மாற்றுவதற்கு முன்புவரை ரொம்பவே ஸ்லோவாக இருந்த உங்களுடைய நெட் சற்று வேகமாக இருக்கும்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…