trai [Image source : Entrackr]
ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 2 மாதங்களுக்குள் புதிய டிஜிட்டல் தளம் (DCA) ஒன்றை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிசிஏ-வை முன்னுரிமையாக உருவாக்கி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்ட், TRAI ஆல் ஆராய்ச்சி செய்யப்படும் தொழில்நுட்பங்களின் நீண்ட பட்டியலில் DCA வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்தது. பின்னர், மே மாத இறுதியில் சோதனை அடிப்படையில் இது முதலில் வெளியிடப்படும் என்று TRAI அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெரும் முறை:
அதன்படி, முதல் கட்டமாக, சந்தாதாரர்கள் மட்டுமே இந்த ஸ்பேம் கால் மற்றும் குறுஞ்செய்திகளைப் கட்டுப்படுத்துவதற்கான தங்கள் ஒப்புதலைப் பதிவுசெய்யும் செயல்முறையைத் தொடங்க முடியும். பின்னர், வணிக நிறுவனங்கள் விளம்பரச் செய்திகளைப் பெற வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெற அவர்களை அணுக முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்தியா (டிராய்) நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DCA என்றால் என்ன?
வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள விரும்பும் பிராண்டுகள் அல்லது நிறுவனங்களுகளின் ஒப்புதலைப் பெற உதவும். டிஜிட்டல் லெட்ஜர் பிளாட்ஃபார்ம் (DLT) தளங்களில் நுகர்வோர் ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறையையும் DCA கண்காணிக்கும். புதிய DCA வசதிகள் DLT-களில் ஒப்புதல் அறிக்கையை விரைவாக சேகரிக்க உதவும்.
‘
DLT என்றால் என்ன?
இயங்கு தளங்கள் (Operating System) தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நடத்தப்படும் அனுப்புநர் ஐடிகள் மற்றும் டெம்ப்ளேட்களின் பதிவை வைத்து நிர்வகிப்பதற்கான டிஜிட்டல் அமைப்புகளாகும். வணிகங்கள் தொடர்புடைய விவரங்களை DLT-களில் பதிவு செய்ய வேண்டும்.
டிராய் அறிவுரை:
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…