இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

Google Meet தளத்தில் குரல் உரையாடலை அப்படியே மொழிமாற்றம் செய்து ஒலிக்கச் செய்யும் Real Time Speech Translation அம்சம் அறிமுகமானது.

Real-Time Speech Translation GOOGLE MEET

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக  அறிவித்துள்ளது. இந்த அம்சம்  உங்கள் பேச்சை உடனே வேறு மொழியில் மாற்றி, உங்கள் குரலில் ஒலிக்கச் செய்யும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் தமிழில் “வணக்கம்” என்று பேசினால், மறுபுறம் உள்ளவருக்கு அதை ஆங்கிலத்தில் “Hello” என்று  ஒழிக்க செய்யும். அது மட்டுமின்றி உங்கள் குரலின் உணர்ச்சியும், இயல்பான தன்மையும் கொஞ்சம் கூட மாறாது எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

முதலில்  இந்த வசதி Google AI Pro மற்றும் Ultra சந்தா (பணம் செலுத்த வேண்டிய திட்டம்) உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும். அதுவும்  ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு மட்டுமே வேலை செய்யும். விரைவில் அடுத்த சில வாரங்களில் இத்தாலியன், ஜெர்மன், போர்ச்சுகீசிய மொழிகள் சேர்க்கப்படும். அதன்பிறகு, அப்படியே மெல்ல மெல்ல மாற்றமொழிகளும் இணைக்கப்படும்.

இப்போது Google AI Pro மற்றும் Ultra சந்தா பயனர்களுக்கு இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்தாலும் கூட  2025 இறுதிக்குள் இது எல்லோருக்கும் (இலவசமாகவோ அல்லது கட்டணத்துடனோ) கிடைக்கும். அதேசமயம், இப்போது தமிழுக்கு இந்த வசதி இல்லை. ஆனால், Google பல இந்திய மொழிகளை சேர்ப்பதால், எதிர்காலத்தில் தமிழும் சேர்க்கப்படலாம்.

ஒரு வேலை தமிழில் இந்த அம்சம் வந்துவிட்டது என்றால் பல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லலாம். உதாரணமாக தமிழ் பேசும் உங்கள் பாட்டி, ஆங்கிலம் பேசும் உங்கள் உறவினருடன் எளிதாகப் பேசலாம். வேலையில், வெவ்வேறு மொழி பேசும் நபர்கள் ஒரே அழைப்பில் உரையாடலாம்.மொழி தெரியாவிட்டாலும், எல்லோரும் ஒருவரையொருவர் புரிந்து பேச முடியும்.

 Real-Time Speech Translation எப்படி பயன்படுத்துவது?

இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு நீங்கள் Google Meet-இல் வீடியோ அழைப்பு தொடங்கவும். அதில் “Speech Translation” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் நீங்கள் பேசும் மொழியையும் ( எடுத்துக்காட்டாக ஆங்கிலம்), கேட்க விரும்பும் மொழியையும் (எடுத்துக்காட்டாக  ஸ்பானிஷ்) தேர்வு செய்யவும். பிறகு உங்கள் குரலை மொழிமாற்ற பயன்படுத்த அனுமதி கொடுத்தீர்கள் என்றால் இந்த அம்சம் வேலை செய்யும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்