அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங்..108MP கேமரா.! இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி சீரிஸ் அறிமுகம்!

Published by
கெளதம்

Infinix Note 40 Pro: இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி ஆகியவற்றை இன்று (ஏப்ரல் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

infinix Note 40 series [file image]
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Infinix Note 40 Pro 5G‘ மற்றும் ‘Note 40 Pro+ 5G‘ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் Infinix Note 40 Pro 5G சீரிஸ் Flipkart -ல் விலை ரூ.21,999 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், Infinix Note 40 Pro+ 5G-ன் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது.

இன்று அறிமுகமாகி உள்ள இந்த போனை இன்று ஆர்டர் செய்தால், ரூ.4,999 மதிப்புள்ள MagKit ஐ இலவசமாக பெற்று கொள்ளலாம். MagKit ஆனது MagCase மற்றும் MagPower சார்ஜர் ஆகியவை கிடைக்கும். இந்த ஆஃபர் ஒரு நாள் ஆஃபராக Flipkart -ல் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

infinix Note 40 Pro – Note 40 Pro+ 5G [file image]
இரண்டு போன்களும் 20W வயர்லெஸ் MagCharge மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் உடன் கிடைக்கிறது. இதன் மூலம், ஸ்மார்ட்போனை 26 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்:

  • Infinix Note 40 Pro 5G மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
  • Infinix Note 40 Pro+  மாடல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
  • 108MP OIS + 2MP + 2MP பின்புற கேமராவும், 32MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
  • இதில் ஆக்டிவ் ஹாலோ ஏஐ லைட்டிங் உள்ளது, மேலும் இது இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.
  • இரண்டு மாடல்களும் MediaTek Dimensity 7020 சிப்செட் மூலம் இயங்குகிறது.
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 6.78-இன்ச் FHD+ 120 Hz கர்வ் AMOLED டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.
  • இரண்டும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான XOS 14-ல் இயங்குகின்றன.
  • Note 40 Pro மாடல் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000 mAh பேட்டரியைகொண்டுள்ளது.
  • Note 40 Pro+ ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,600 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
  • JBL வழங்கும் இரண்டு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
  • இரண்டு மாடல்களும் அப்சிடியன் பிளாக், டைட்டன் கோல்ட் மற்றும் விண்டேஜ் கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

சலுகைகள்:

ஆரம்ப விற்பனையாக Flipkart -ல் HDFC மற்றும் SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பொறுத்தவரையில், தகுதிகேற்ற மொபைல் போனை , எக்ஸ்சேஞ்ச் செய்து ரூ. 19,500 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

Recent Posts

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

11 minutes ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

57 minutes ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

60 minutes ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

2 hours ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

2 hours ago

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

17 hours ago