தொழில்நுட்பம்

இனி புதிய கேம்-ஐ டவுன்லோட் செய்ய தேவையில்லை..! யூடியூப் அசத்தல் வசதி.!

Published by
செந்தில்குமார்

நாம் இதுவரை பல ஆப்களில் கேம்களை விளையாடி இருப்போம் அல்லது தனித்தனியாக பதிவிறக்கம் செய்து விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடான யூடியூப்பில் இப்பொழுது கேம் விளையாடும் ‘யூடியூப் பிளேயபிள்ஸ்’ (Google Playables) அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

யூடியூப்பை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றவும், யூடியூப்பில் பல்வேறு கேமிங் பிரியர்களை ஈர்க்கவும் இந்த அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு கேம்களை பதிவிறக்கம் செய்யாமலோ அல்லது இன்ஸ்டால் செய்யாமலோ விளையாட முடியும்.

ஒரே நாளில் ரெட்மி கே 70 சீரிஸ் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிடும் சியோமி.!

இதனால் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் தேவையற்ற பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை. இது மக்களை அதிகமாக ஈர்க்கும். தற்போது சோதனைக்காக ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் ஆங்கிரி பேர்ட்ஸ் ஷோ டவுன், பிரைன் அவுட், டெய்லி கிராஸ்வேர்ட் மற்றும் ஸ்கூட்டர் எக்ஸ்ட்ரீம் ஆகியவை அடங்கும்.

மேலும், வரும் காலங்களில் பல கேம்களை சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இது பயணத்தின்போது கேம்களை விளையாடுவதற்கு மிகவும் வசதியான வழியாகும். யூடியூப்பில் நேரடியாக கேம்களை விளையாடக்கூடிய இந்த அம்சம் தற்போது யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

5000 mAh பேட்டரி.. 100 வாட்ஸ் சார்ஜிங்.! வெளியானது ரியல்மீ 12 ப்ரோ+ அம்சங்கள்.!

பிளேயபிள்ஸின் முழு வெளியீட்டிற்கான தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த யூடியூப் பிளேயபிள் அம்சம் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் அனைத்து பயனர்களுக்கும் வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Recent Posts

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

19 minutes ago
துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

57 minutes ago
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

2 hours ago

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

3 hours ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

3 hours ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

4 hours ago