Jio
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடக்கப்பட்டதில் இருந்து பயனர்களுக்கு அதிகப்படியான ஆஃபர்களை அள்ளி வழங்கியது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ 400 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக செயல்பட்டுவருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 4G மற்றும் 4G+ சேவைகளை வழங்குகிறது. தொடர்ந்து 5ஜி சேவையிலும் கவனம் செலுத்தி வந்தது. 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 5ஜியை வெளியிடுவதாக அறிவித்தது. அதன்படி, பல நகரங்களில் 5G சேவையையும் வழங்கி வருகிறது.
இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வண்ணம் பல சேவைகளை வழங்கிவரும் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாகவும், தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அதன் பிளான்களில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் செப்டம்பர் 30 வரை கிடைக்கும். அதில் சிலவற்றை காணலாம்.
ரூ.299 திட்டம்:
இந்த ரூ.299 திட்டம் 28 நாட்கள் என்ற வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலை பெற முடியும். இவற்றுள் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்க்ரிப்ஷனும் அடங்கும். இதைத்தவிர 7வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, ஜியோ இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 7 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
ரூ.749 திட்டம்:
இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் கிடைக்கிறது. இவற்றுள் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்க்ரிப்ஷனும் அடங்கும். இதைத்தவிர 7வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, பயனர்களுக்கு (7GB X 2) 4ஜி டேட்டா வவுச்சர்கள் மூலம் 14 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.2,999 திட்டம்:
மற்ற திட்டங்களை பொறுத்தவரையில் இந்த திட்டத்தில் பல சிறப்பு சலுகைகள் உள்ளன. இதில் 365 நாள் வேலிடிட்டியுடன் கூடிய, ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் கிடைக்கிறது. இவற்றுள் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்க்ரிப்ஷனும் அடங்கும். இதைத்தவிர 7வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, (7GB X 3) 4ஜி டேட்டா வவுச்சர்கள் மூலம் 21 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஸ்விக்கியில் ரூ.249 வாங்கினால் ரூ.100 தள்ளுபடி மற்றும் யாத்ரா, அஜியோ, நெட்மெட்ஸ், மெக்டொனால்ட்ஸ் ஆகியவற்றிற்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…