அறிமுகமானது ரியல்மி P1 சீரிஸ் ..!! இது இவங்களுக்கு மட்டும் தான் !!

Published by
அகில் R

Realme P1 : இந்திய மார்க்கெட்டில் இன்றைய நாளில் அறிமுகமாகி உள்ளது ரியல்மி சீரியசின் புதிய 5G போன். அந்த போனின் அமைப்பு, சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்க்கலாம்.

ரியல்மி P1 சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் மொபைல் பிராண்டின் புதிய வரிசையாகும். இது இந்திய மக்குளுக்கெனவே உருவாக்க பட்ட மொபைல் போன் ஆகும். மேலும் இந்த சீரிஸில் ரியல்மி P1 மற்றும் ரியல்மி P1 Pro ஆகிய இரண்டு வித மொபைல்கள் அறிமுகமாகியுள்ளது. ரியல்மி நிறுவனம் ஏற்கனவே இந்த மொபைலின் அம்சங்கள், விலை விவரங்கள் என்று சில முக்கிய விவரக்குறிப்புகளை முன்னரே வெளியிட்டது. அதே போல தற்போது வெளியாகி உள்ள இந்த ரியல்மி சீரிஸ் அதே அம்சங்களுடன் வெளியாகி உள்ளது.

நிறங்கள் :

ரியல்மி P1 போன் பீகாக் க்க்ரீன் (Pecock Green) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoneix Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ரியல்மி P1 ப்ரோ 5G போன் ஆனது பேரட் ப்ளு (Parrot Blue) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoenix Red) ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.

வடிவமைப்பு :

இந்த ரியல்மி P1 போன் மிகவும் பழக்கமான வடிவமைப்புடனே உருவாக்கி இருக்கின்றனர். போனின் இந்த வடிவமைப்பு புதிதாக இல்லை என்றாலும் பார்ப்பதற்க்கு ஒரு ஈர்க்க கூடிய உணர்வையே கொடுக்கிறது. இந்த ரியல்மி P1 வலது புறத்தில் வால்யூம் பட்டனும், பவர் பட்டன் உள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு முன் ஸ்க்ரீனில் மேல் புறத்தில் சென்டரில் பஞ்ச்-ஹோல் உள்ளது. அதே போல பின் புறத்தில், டிரிபிள் கேமராக்கள் மற்றும் எல்இடி (LED) ஃபிளாஷ் லைட்டுடன் அமைந்துள்ளது.

அதே போல மறுபுறம், ரியல்மி P1 ப்ரோ ஆனது டிசைனில் முன்னிலும், பின்னிலும் வளைந்த விளிம்புகளுடன் அதிக பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. மேலும் இதிழும் முன் புறத்தில் செல்ஃபி எடுப்பதற்கு முன் ஸ்க்ரீனில் மேல் சென்டரில் பஞ்ச்-ஹோல் உள்ளது. அதே போலபின் புறத்தில் டூயல் கேமராக்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் அமைந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள் :

  • ரியல்மி P1 சீரிஸ் ஆனது 120 Hz அமோலெட் டிஸ்ப்ளே, 2,000 nits பீக் பிரைட்னஸ் (Brightness), ரெயின்வாட்டர் டச் (Rainwater Touch) அம்சமாக கொண்டதுடன். மேலும், TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் பெற்றுள்ளது.
  • இது வளைந்த விளிம்புகளுடன் 2160Hz PWM டிம்மிங் மற்றும் Pro-XDR உடன் வருகிறது. இது ரியல்மிகென உரித்தான ஒன்றாகும்.
  • மீடியா டெக் டைமன் சிட்டி (MediaTek Dimensity) 7050 SoC மூலம் இது இயக்கப்படுகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். அதே போல ரியல்மி ப்ரோ சற்று மாறுபட்டு ஸ்னாப்டிராகன் 6 ஜென் (Snapdragon 6 Genration 1) சிப்செட்டுடன் உருவாகி உள்ளது.
  • இதனது கூலிங் திறன் 7-லேயர் VC கூலிங் சிஸ்டம் மற்றும் IP54 மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது. அதே போல ரியல்மி ப்ரோ பதிப்பு 3D VC கூலிங் சிஸ்டத்தை கொண்டு உருவாகி உள்ளது.
  • இரண்டு போன்களும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருக்கிறது.
  • கேமராவை பொறுத்த வரையில் ரியல்மி P1 ஆனது மூன்று கேமரா சென்சார்களைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ரியல்மி P1 ப்ரோ ஆனது பின்புறத்தில் 2 கேமராக்களுடன் உருவாக்கபட்டுள்ளது.

விலை விவரங்கள் :

  • 6GB ராம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி P1 5G மொபைல் போன் ஆரம்ப விலையாக ரூ.15,999-க்கும், ஆஃப்பர் விலையாக ரூ.1000 வரை கழிந்து ரூ.14,999 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என தெரிவித்துள்ளனர்.
  • அதே போல் 8GB ராம் + 256GB ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி P1 5G மொபைல் போன் ரூ.16,999-க்கும், ஆஃப்பர் விலையாக ரூ.2000 வரை கழிந்து ரூ.16,999 ரூபாய்க்கும் விற்பனை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
  • 8GB ராம் + 128 GB ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி P1 ப்ரோ மொபைல் போன் ஆரம்ப விலையாக ரூ.21,999-க்கும் ஐசிசிஐ பேங்க், எச்.டி.எப்.சி பேங்க் மற்றும் எஸ்பிஐ கார்ட் உபயோகிக்கும் பயனர்களுக்கு ஆஃப்பர் விலையாக ரூ.2000 வரை கழிந்து ரூ.19,999-க்கு விற்பனை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
  • அதே போல 8GB ராம் + 256GB ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி P1 ப்ரோ மொபைல் போன் ஆரம்ப விலையாக ரூ.22,999-க்கும் ஐசிசிஐ பேங்க், எச்.டி.எப்.சி பேங்க் மற்றும் எஸ்பிஐ கார்ட் உபயோகிக்கும் பயனர்களுக்கு ஆஃப்பர் விலையாக ரூ.2000 வரை கழிந்து ரூ.20,000-க்கும் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு : இந்த ரியல்மி P1 சீரிஸ் இன்று மாலை 6 மணி முதல் 8மணி வரை  realme.com மற்றும் பிலிப்கார்ட்டிலும் (Flipkart) விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ரியல்மி P1 ப்ரோ ஏப்ரல்-22ம் தேதி அன்று மலை 6 மணி முதல் 8 மணி வரை  realme.com மற்றும் பிலிப்கார்ட்டிலும் (Flipkart) விற்பனைக்கு வந்துவிடும் என்று அதிகாரப்பூர்வமாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரியல்மி P1 சீரிஸ் உடன் இரண்டு அம்சமான கேட்ஜெட்டுகளையும் வெளியிட்டு உள்ளது ரியல்மி நிறுவனம். அது என்னவென்றால் ரியல்மி பட்ஸ் T110 (Realme Buds T110), மற்றும்  ரியல்மி பேட் 2 (Realme Pad 2) ஆகும். தற்போது அவற்றை பற்றிய சிறிய குறிப்பை பார்ப்போம்.

ரியல்மி பட்ஸ் T110

realme T110 Buds

இயர்பட்கள் 10 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. இரைச்சலை ரத்து செய்து தெளிவான பாடல்கள் கேட்பதற்கு உதவுகிறது. மேலும், போன் கால் பேசும்பொழுது இரைச்சலை ரத்துசெய்ய AI ENC தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக, வேகமாக சார்ஜ் செய்து கொள்ளும்படி பேட்டரி.

அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால், 38 மணிநேரம் வரை பாடல் கேட்கும்படி, பேட்டரி வசதியை கொண்டுள்ளது. இதன் விலை 1,499 ரூபாய் என்றும், ஆனால் 200 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு 1,299 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும் ஏப்ரல் 19ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது, அதாவது (Country Green) கண்ட்ரி க்ரீன், (Jazz Blue) ஐஸ் ப்ளூ மற்றும் (Punk Black) பங்க் பிளாக் ஆகியவை அடங்கும்.

ரியல்மி பேட் 2

Realme Pad 2

ரியல்மி பேட் 2 ஆனது 11.5-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருவதால் இந்த திரையில் பார்க்கப்படும் வீடியோக்களை பொறுத்து 40 ஹெர்ட்ஸ், 60 ஹெர்ட்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் என்று மாற்றியமைக்கக்கூடிய அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே ஆதரிக்கும் திறன் உடன் உருவாக்கி உள்ளனர்.

33W SUPERVOOC சார்ஜிங்குடன் 8,360mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது இன்ஸ்பிரேஷன் கிரீன் (Inspiration Green) மற்றும் இமேஜினேஷன் கிரே (Imagination Grey) என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. 16 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் 8MP பின்புற மற்றும் 5MP கேமராக்களை கொண்டுள்ளது. இதனை realme.com மற்றும் Flipkart இல் ரூ.17,999க்கு கிடைக்கிறது. இதனை ரூ.2,000 அறிமுக சலுகையாக பெற்று கொள்ளலாம்.

இந்த 2 பொருள்களும் வருகிற ஏப்ரல்-19 ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துவிடும் என்பதை தெரிவித்து ரியல்மி நிறுவனம்.

Recent Posts

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

11 minutes ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

37 minutes ago

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

47 minutes ago

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

11 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

11 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

13 hours ago