வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ!

Published by
பால முருகன்

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக அப்டேட்டுகளும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் சேனல் கிரியேட் செய்துகொள்ளும் அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொன்டு வந்தது.  இந்த நிலையில், தற்போது இந்த  வாட்ஸ்அப் சேனலில் பல புது அப்டேட்கள் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்!

இப்போது கொண்டுவரவுள்ள அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில் ” வாட்சப் சேனல்களுக்கு குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு  உட்பட பல புதிய அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்” என அறிவித்துள்ளார். அது என்னென்ன அப்டேட் என்பதனை பற்றி விவரமாக பார்க்கலாம்.

வாக்கெடுப்பு (Voting Poll)

  • இனிமேல் வாட்சப் சேனல்களில்( Voting Poll ) உருவாக்கிக்கொள்ளலாம். இந்த அம்சம் மூலம் சேனல் நிர்வாகிகள் தங்கள் பார்வையாளர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்களை நேரடியாக கேட்டுக்கொள்ளமுடியும். கருத்துக்கணிப்புகளுடன், பயனர்கள் சுருக்கமான கேள்விகளை உருவாக்கவும் இந்த வசதி உதவும்.

சேனலில் பல நிர்வாகிகள் (Admin)

  • வாட்சப் சேனல் அப்டேட் வந்ததில் இருந்து அதில் ஒருவர் மற்றும் இரண்டு பேர் மட்டுமே நிர்வாகிகள் (Admin)-ஆகா இருக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. பலரும் (Admin)-ஆகா இருக்கும் வசதி கொண்டு வந்தால்  நன்றாக இருக்குமே என காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாட்சப் சேனலில் (Admin)-ஆகா  இருக்கலாம்.

ஸ்டேட்டஸ் (status)

  • வழக்கமாகி வாட்சப் நம்பரில் மட்டுமே ஸ்டேட்ஸ் வைக்கும் வசதி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சேனலிலும் இனிமேல் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

குரல் (voice message)

  • இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், குரல் புதுப்பிப்புகள் (voice message) என்று கூறலாம். இந்த வசதி மூலம் சேனல் நிர்வாகிகள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் மேலும் தொடர்புகொள்ள குரல் குறிப்புகளை அனுப்ப உதவுகிறது.

மேலும் இந்த வாட்ஸ்அப் புதிய அம்சங்களை ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணையம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் படிப்படியாக அவை உலகம் முழுவதும் இருக்கும் வாட்சப் பயனர்களுக்கு கிடைக்கும்.

Recent Posts

மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்ட திமுக எம்.பி.க்கள் சிவலிங்கம், சல்மா, வில்சன்.!

டெல்லி : தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் பி.வில்சன் ஆகியோர் இன்று…

3 minutes ago

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.!

சென்னை : தமிழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை…

25 minutes ago

தமிழில் உறுதிமொழி ஏற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்.!

டெல்லி : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராக…

46 minutes ago

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றது.!

சென்னை : வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த…

2 hours ago

யூடியூப் வீடியோ பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற சிறுவன் உயிரிழப்பு.!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப்…

2 hours ago

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில்,…

3 hours ago