தொழில்நுட்பம்

ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் அகற்றப்பட்டது புதிய ‘எக்ஸ்’ லோகோ..!

Published by
செந்தில்குமார்

ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவானது சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது.  அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது.

இதன்பிறகு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நீலப்பறவை லோகோ அப்புறப்படுத்தப்பட்டு, புதிய ‘எக்ஸ்'(X) எனும் எழுத்து அலுவலகத்தின் உயரத்தில் வைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது, நிறுவனம் அந்த எக்ஸ் லோகோவை அகற்றப்பட்டுள்ளது.

இந்த முடிவானது மக்கள் புகாரளித்த நிலையில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த புகார்களில் அலுவகத்தில் மீது வைக்கப்பட்டுள்ள எக்ஸ் லோகோவில் இருந்து வரும் அதிக தீவிரமான வெள்ளை ஸ்ட்ரோபோஸ்கோபிக் ஒளி மக்களுக்கு கண்களை பாதிப்பதோடு எரிச்சலை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த எக்ஸ் அடையாளம் நிலையற்றதாக உள்ளது. ஒரு அழுத்தமான நிலநடுக்கம் ஏற்பட்டால், லோகோ கீழே விழுந்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இவ்வாறு எண்ணற்ற புகார்கள் வந்தமையால் நிறுவனம் லோகோவை அகற்றியதாக கூறப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

41 minutes ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ‘இழப்பீடு இல்லை’ என மிரட்டுவதாக எழுந்த புகார்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…

3 hours ago