உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

OnePlus12

ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒன்பிளஸ் ஓபன் என்ற போல்டபிள் போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நிறுவனம், தற்போது அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, இந்த போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 12 அறிமுகமாகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12 இந்தியா மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதியானது தற்செயலாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டாடா.! ஓசூர் ஆலையை விரிவுபடுத்த முடிவு.!

அதன்படி, இப்போது ஒன்பிளஸ் 12 போனுக்கான கிவ்அவே சென்றுகொண்டிருக்கிறது. ஒன்பிளஸுக்கான அமெரிக்க இணையதளத்தில் உள்ள கிவ்அவே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில்,  அடுத்த ஆண்டு ஜனவரி 23 அன்று கிவ்அவே முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல ஒன்பிளஸ் 12 அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கிவ்அவே முடிவடையும் என்று இந்தியன் ஒன்பிளஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கையில் ஒன்பிளஸ் 12 ஆனது ஜனவரி 24, 2024 அன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இருப்பினும், ஒன்பிளஸ் நிறுவனம் வெளியீடு குறித்து இதுவரை ஏன்டா அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாகவே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம். இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

இந்த ஒன்பிளஸ் 12 போனில் 2K (3168×1440 பிக்சல்கள்) ஹைரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளே உள்ளது. இடது புறத்தில் அலர்ட் ஸ்லைடர், ஐபி68 ரேட்டிங் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கார்டுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) பொருத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்டையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 உள்ளது. ஹாசல்ப்ளாடிற்கான ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய சோனி IMX96 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி IMX581 சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம், 6X சென்சார் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம். அதோடு செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

டீப்ஃபேக்குகளின் புழக்கத்தைத் தடுப்பது  சமூக ஊடக தளங்களின் பொறுப்பு – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

இதில் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்ட 5,400 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்பிளஸ் 12 ஆனது 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson
Vikram in Veera dheera sooran film posters
Donald Trump and cars