தொழில்நுட்பம்

DogeRAT: ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கும் மால்வேர்.! ஆலோசனை வழங்கும் மத்திய அரசு.!

தொழில்நுட்ப உலகமாக மாறியிருக்கும் இந்த காலக்கட்டத்தில் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அந்த அளவு தீமையும் இருக்கிறது. அதன்படி, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் மால்வேர் போன்ற ஆபத்தான மென்பொருள் பல வழிகளில் பரவி வருகிறது. இதன் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடுபோவதோடு மட்டுமல்லாமல் அவர்களது சாதனங்களிலும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைத்து, முக்கியமான தகவல்களை அணுகக்கூடிய மால்வேர் ஒன்று பரவி வருவதாக மத்திய […]

7 Min Read
DogeRAT

AI: செயற்கை வைரஸ்களை உருவாக்கவும், தொற்றுநோய்களைத் தூண்டவும் AI உதவும்.! கூகுள் முன்னாள் நிர்வாகி எச்சரிக்கை.!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழிநுட்பமானது வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவைத் தவறாக பயன்படுத்துவதன் மூலம் செயற்கையான வைரஸ்கள் உருவாக்கப்படலாம் என்றும், அவற்றினால் தொற்று நோய்கள் உருவாகலாம் என்று கூகுள் டீப் மைண்ட் இணை நிறுவனரும், ஏஐ நிபுணருமான முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார். அதோடு நோய்க்கிருமிகள் மக்களை பாதிப்பதைத் தடுப்பதற்கு எவ்வாறு பலக் கட்டுப்பாடுகள் உள்ளதோ அதேபோல, வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் அதனால் உருவாக்கப்படும் கருவிகள் மற்றும் மென்பொருள்களை மக்கள் […]

5 Min Read
AI

HDVideo: போட்டோ மட்டும் இல்ல வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம்..! வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய அம்சம்.!

வாட்ஸ்அப் ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் என்றும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகியுள்ளது. இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப […]

4 Min Read
WhatsApp HD video

UPI ATM: இனி பணம் ஏடிஎம் கார்டு தேவை இல்லை.! யுபிஐ மட்டும் போதும்.!

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில் வங்கி பரிமாற்றங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் பேமெண்ட், ஆன்லைன் வாலட் போன்ற பேமெண்ட் முறைகள் உள்ளது. இதில் ஒரு சில மக்கள் பேங்க் மற்றும் ஏடிஎம்க்குச் சென்று நேரடியாகப் பணத்தை எடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பயன்படுத்துகின்றனர். யுபிஐ: இந்தியாவில் நடக்கும் அனைத்து சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் […]

8 Min Read
UPI ATM

RealmeNarzo60x5G: 29 நிமிடத்தில் 50% சார்ஜ்.! கண்ணை கவரும் டிசைன்.! அறிமுகமானது “ரியல்மி நார்சோ 60 x 5ஜி” ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் 6.74 இன்ச் டிஸ்பிளே மற்றும் 5000 mAh பேட்டரி கொண்டரியல்மி நார்சோ 60 x 5ஜி என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களாக ரியல்மி அதன் மற்ற ஸ்மார்ட்போன்களை விட நார்சோ மாடல்களில் கவனம் செலுத்தி வந்தது. அதன்படி, இதற்கு முன்னதாக, பிரிமியம் லூக்குடன் லெதர் பினிஷுடன் கூடிய ரியல்மி நர்சோ 60 மற்றும் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது ரியல்மி நார்சோ 60 x 5ஜி […]

7 Min Read
RealmeNarzo60x

Jio 7th Anniversary: பண்டிகைய கொண்டாடுங்க..! அசத்தலான ஆஃபர்களை அள்ளி வீசிய ஜியோ.!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடக்கப்பட்டதில் இருந்து பயனர்களுக்கு அதிகப்படியான ஆஃபர்களை அள்ளி வழங்கியது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ 400 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக செயல்பட்டுவருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 4G மற்றும் 4G+ சேவைகளை வழங்குகிறது. தொடர்ந்து 5ஜி சேவையிலும் கவனம் செலுத்தி வந்தது. 77 வது சுதந்திர தினத்தை […]

6 Min Read
Jio

Whatsapp: வீடியோ மெசேஜ் முதல் ஸ்கிரீன் ஷேரிங் வரை.! வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய அட்டகாசமான அம்சங்கள்.!

உலகில் இருக்கும் ஆன்ட்ராய்டு பயனர்கள் முதல் ஐஓஎஸ் பயனர்கள் வரை, மெட்டா நிறுவனத்தின்  செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சேட் செய்வது மட்டுமல்லாமல், நினைவுகளை பரிமாறிக்கொள்வதற்காக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு குரூப் சேட், குரூப் கால் உட்பட பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளலாம். இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிடுகிறது. அந்த அப்டேட்கள் பயனர்களுக்கு எதிர்பார்க்கும் […]

11 Min Read
WhatsappMessageEdit

Meta Quest: ஆப்பிள் விஷன் ப்ரோக்கு போட்டியா.? அடுத்த படைப்பிற்கு எல்ஜியுடன் கைகோர்த்த மெட்டா.!

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஆனது வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், தொழிநுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அதன்பக்கம் திருப்பியுள்ளன. அந்த வகையில், சமீபத்தில் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சத்துடன் கூடிய ஒரு புதிய ஹெட்செட்டை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் (ரூ.2.86 லட்சம்) என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஷன் ப்ரோவில் உள்ள கேமரா […]

6 Min Read
Meta Quest

iPhone15: இந்தியாலேயே ரெடி பண்ணி அறிமுகப்படுத்த போறாங்க..! எப்போது தெரியுமா..?

ஐபோன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்  ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஐபோன் 15 சீரிஸ் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடக்கும் ‘வொண்டர்லஸ்ட்’ என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ஐபோன் 15 மாடல்கள் உற்பத்தியானது இந்தியாவில் ஏற்கனவேத் தொடங்கியது. அதன்படி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 15 தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உற்பத்தி […]

6 Min Read
iPhone 15

Banned Gadgets: இந்த சிறிய பொருள்களால் இவ்வளவு பெரிய ஆபத்தா..! அதான் இப்படி பன்னிட்டாங்க..?

நவீன மயமாகி வரும் உலகில் பல கேஜெட்டுகள் புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதனால் பெரிய அளவில் ஆபத்துகள் வராத வண்ணமே உருவாக்கப்படுகின்றன. ஆனால், முன்பு சிறியதாக உருவாக்கப்படும் பொருட்கள் கூட மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் இருந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அத்தகைய கேஜெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு கேஜெட்டை வாங்குவது சட்டப்பூர்வமாக இருக்கின்ற காரணத்தினால், அதைப் பயன்படுத்துவது என்பதும் சட்டப்பூர்வமானது என்று அர்த்தமாகிவிடாது. கேஜெட்களை தடை செய்வதற்கான காரணங்கள் மாறுபடும். […]

8 Min Read
gadgets

Free Fire: நாங்க இன்னைக்கு அறிமுகம் செய்யவில்லை..! ஆரம்பத்திலேயே யூ-டர்ன் அடித்த கரெனா..!

ஃப்ரீ ஃபயர் (Free Fire) என்பது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்க்காக கரேனாவால் (Garena) உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட இலவச பேட்டில் ராயல் கேம் ஆகும். இந்த ஆன்லைன் கேம் ஆனது 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிடப்பட்டது. முதலில் 100 எம்பிக்கும் குறைவான அளவில் வெளியிடப்பட்ட இந்த கேமில் கிராபிக்ஸ் காரணாமாக பலரும் இதை பதிவிறக்கம் செய்து விளையாடவில்லை. ஆனால், காலப்போக்கில் இதற்கு ரசிகர்கள் அதிகாமாக, 2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் […]

8 Min Read
Free Fire

Flipkart Job: ஒரு லட்சம் பேருக்கு வேலை இருக்கு..! வெளியான அதிரடி அறிவிப்பு.!

இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் “பிக் பில்லியன் டேஸ் 2023” என்பது மற்ற நாட்களை விட அதிக அளவில் விற்பனை நடக்கும் நாளாகும். இந்த நாளில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக சலுகைகளை வழங்கப்படும். இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை அதிக அளவில் ஆர்டர் செய்வார்கள். இந்த நேரத்தில் அதிக அளவில் ஆர்டர்கள் வரும் என்பதால் அதனை சாமளித்து, மக்களுக்குத் தேவையானவற்றை சரியான நேரத்தில் அவர்களிடம் கொண்டு சேர்க்க, […]

5 Min Read
Flipkart

Realme Narzo 60x 5G: தேதி குறிச்சாச்சு..ரியல்மியின் அடுத்த சர்ப்ரைஸ்..! செம்ம ட்ரீட் இருக்கு..!

ரியல்மி நிறுவனம் அதன் 5 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரியல்மி 11x 5G ஸ்மார்ட்போனை ரூ.17,499 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ரியல்மி நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்த நிலையில், தற்பொழுது ரியல்மி நர்சோ 60x 5G என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மீ பட்ஸ் டி300-ஐயும்  வெளியிடவுள்ளது. இந்த இரண்டு சாதனங்களில் அறிமுகமானது, வரும் செப்டம்பர் 6ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ரியல்மி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிமுக […]

6 Min Read
Realme Narzo 60x 5G

Wordpad: உங்க ஓஎஸ் அப்டேட் மட்டும் பண்ணிராதீங்க..! இப்பதான் நியூஸ் வந்துச்சு.?

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓஎஸ்-ல் உள்ள ஒரு முக்கியமான பயன்பாடு வேர்ட்பேட் ஆகும். இது லேப்டாப் மற்றும் கணினியில் தகவல்களை எழுதுதல் மற்றும் திருத்துதல் தொடர்பான அனைத்து அடிப்படைப் பணிகளுக்கும் பயன்படுகிறது. இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் வேர்ட்பேட் அகற்றப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், “வேர்ட்பேட் இனி புதுப்பிக்கப்படாது. வரும் காலங்களில் விடப்படும் விண்டோஸின் புதிய அப்டேட்களில் வேர்ட்பேட் அகற்றப்படும். .doc மற்றும் .rtf மற்றும் .txt போன்ற உரை ஆவணங்களுக்கான விண்டோஸ் நோட் பேட் […]

6 Min Read
Wordpad

OxygenOS14: எதுக்கும் ரெடியா இருங்க..! இந்த மாசத்துல அறிமுகப்படுத்த போறாங்களாம்.? ஒன்பிளஸ் அதிரடி

ஆக்சிஜன் ஓஎஸ் என்பது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயங்குதளம் (OS) ஆகும். இது ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான ஒன்பிளஸ் நிறுவனம் அவர்களின் மொபைல் போன்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கிய ஓஎஸ் ஆகும். இதில் தற்போது வரை ஆக்சிஜன் ஓஎஸ் 13 உள்ளது. இந்நிலையில் புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 14 ஐ அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 14 ஆனது செப்டம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரை அறிமுகமான ஓஎஸ்கள் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் […]

6 Min Read
OxygenOS 14

UPI: ஒரே மாதத்தில் 10 பில்லியன் பரிவர்த்தனைகள்.! டிஜிட்டல் இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதனை..!

பொதுமக்கள் பலராலும் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் உடனடி கட்டண முறையான, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) ஆனது, 2023ல் முதல் முறையாக 10 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்துள்ளது. அதன்படி, முந்தைய மாதங்களை விட ஆகஸ்ட் மாதத்தில் பணப்பரிவர்த்தனையானது 10 பில்லியனைக் கடந்துள்ளது. இது ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையை விட தோராயமாக 2 பில்லியன் அதிகம். இந்தியாவில் நடக்கும் அனைத்து சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 75 சதவீதத்திற்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை உள்ளது. இது சுமார் 330 மில்லியன் […]

4 Min Read
unified payments interface

செப்.19 முதல் ஜியோவின் ஏர் ஃபைபர் சேவைத் தொடங்கப்படும்..! முகேஷ் அம்பானி அறிவிப்பு.!

கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி நெட்வொர்க்கை வெளியிடத் தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ, தனது ஏர் ஃபைபர் சேவையை செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கவுள்ளது. இந்த அறிவிப்பானது இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் 46-வது பொதுக்குழு கூட்டத்தின்போது, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த கேபிளின் உதவி இல்லாமல் காற்றிலேயே அதிவேக இணைய சேவையை இந்தியா முழுவதும் வழங்கவுள்ளது.

2 Min Read
mukesh ambani

தமிழ்நாட்டில் ஐபோன் 15 உற்பத்தியைத் தொடங்கியது ஃபாக்ஸ்கான் நிறுவனம்..!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள அதன் புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களை நிறுவனம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் அளவை விரைவாக […]

3 Min Read
iPhone 15

ஜுக்கர்பெர்க் நவீன கால புரூஸ் லீ! அவர் தான் வெற்றிபெறுவார்.! அந்தர் பல்டி அடித்த மஸ்க்!

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவருக்கிடையே தொழில்முறை போட்டியானது இருந்து வருகிறது. அதே போல, இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர். இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் தான் பேசியதை எலான் மஸ்க், எக்ஸ் கணக்கில் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரலாற்றாசிரியர் வால்டர் ஐசக்சனிடமும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், “அடுத்த வாரம் உங்கள் வீட்டில் பயிற்சி செய்வோமா?” என்று […]

5 Min Read
musk vs mark

சண்டைக்கு இடம் குறிச்சாச்சு! பிரதமர் கிட்டையும் பேசியாச்சு – எலான் மஸ்க் அதிரடி!

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர். இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் சண்டையிடுவதற்கான புதிய விவரங்களை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அதன்படி, இவர்கள் இருவருக்கு இடையான போட்டி இத்தாலியில் நடைபெறும் என தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்வீட்டில், “எங்கள் இருவருக்கு இடையான சண்டையானது என்னுடைய மற்றும் ஜூக்கர் பெர்க்கின் பவுண்டேஷனால் […]

4 Min Read
Mark vs Musk