பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய கூட்டமைப்பு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் உலகமே அஞ்சி இருக்கும் நிலையில் தடுப்பூசியை மட்டுமே உலக மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில், வளர்ச்சியடைந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரித்து வழங்கி உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. ஏழை நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளின் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து 27 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, இந்த மாநாட்டில் உலகளாவிய கொரோனா தடுப்பூசியின் சமமான அணுகுமுறையை உறுதி செய்யும் முயற்சிகளை நிறுத்திவிட வேண்டும் என்றும் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இதுவரை இந்தியாவில் 20 கோடியே 4,94,991 டோஸ் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…