மேற்கு ஆப்கானிஷ்தானில் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பேர் பலி! பெண்கள் உட்பட குழந்தைகள் உயிரிழப்பு….
மேற்கு ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், ஆப்காணிஸ்தான் மேற்கு மாகாணமான ஹெராட்டின் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதில் குறைந்தது 12 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹெராத் மாகாணத்தில் அட்ராஸ்கான் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெறிவிக்கப்பட்டிருந்தது, இதன்மூலம் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அறியப்பட்டது, மேலும் அங்கு உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகள் மற்றும் பழத்தோட்டங்கள் வெள்ள நீரால் அழிக்கப்பட்டுள்ளது,வெள்ளத்தால் மாவட்ட சாலைகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி மூடப்பட்டுள்ளது, இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழு வந்துள்ளதாகவும்,அங்கே சிக்கியிருக்கும் குடும்பங்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக மேற்கு ஆப்கானிஷ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக்கு கொண்டிருக்கிறது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…