சில சமயங்களில் 50 சதவீதம் என்பது 100 சதவீதத்தை விட சிறந்தது என அரவிந்த்சாமி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, திரையரங்குகள், படப்பிடிப்புகள் என அனைத்துக்குமே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி படிப்படியாக அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சினிமா துறையினரின் வாழ்வு முன்னேறுவதற்கும் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக 50% இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ஈஸ்வரன், மாஸ்டர் உள்ளிட்ட முக்கியமான படங்கள் வெளியாக இருப்பதால் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 100 சதவீத பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியையும் கொடுத்துள்ளது. இதனால் திரையுலகினர் பலரும் மகிழ்ச்சியில் முதல்வருக்கு நன்ற தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த்சாமி அவர்கள், சில நேரங்களில் 50% என்பது 100% விட சிறந்ததாக இருக்கும். அவற்றில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். திரையுலகினர் மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில்100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்றுள்ள நிலையில், அரவிந்த்சாமியின் இந்த ட்விட்டர் பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த பதிவு,
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…