உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,00,006 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உயிர்களை கொன்று குவித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. சீனாவில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் வைரஸ் சீனாவை விட்டு விலகி மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,00,006 பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,32,466 ஆக உயர்ந்து, உயிரிழப்பின் எண்ணிக்கை 1,60,784 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 7,38,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 39,015 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் நாட்டில் 1,94,416 பேர் பாதிக்கப்பட்டு, 20,639 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 1,75,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23,227 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…