விஜயின் எதிர்காலம் குறித்து தான் யோசிப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்த நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் எழும்பியது. இதையடுத்து விஜய் தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது இது குறித்து பேசி உள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், தான் கட்சி தொடங்குவது விஜய்க்காக தான் எனவும், அது அவருக்கு ஒருநள் புரியும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது யாரோ அவரை குழப்பி வருவதால் தான் இவ்வாறு அவர் நடந்துகொள்கிறார் எனவும் தெரிவித்த அவர், இதன்மூலம் விஜய்க்கு ஒரு அரசியல் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும், மற்றபடி இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் எதிர்காலத்தைக் குறித்து யோசிப்பது தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…