நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.
இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் ஊர்க்காவலன், கே.எஸ்.ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக, பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடிகை சித்ரா நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்று அழைக்கப்பட்டார். கடைசியாக இவரது நடிப்பில் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு 2020 ஜனவரி மாதம் 3- ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், சென்னையில் சாலிகிராமத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…