இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்.
நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை காயத்ரி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநாதன் இசையமைத்து வருகிறார். ஆக்சன் கதைக்களமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறு விறுவென நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நடிகை சரண்யா பொன்வண்ணன் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான “தென்மேற்கு “நீர்ப்பறவை”, “பருவக்காற்று” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…