பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையில் பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார்.அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார்.
அதைதொடர்ந்து, புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தநிலையில் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் இளம் பிரதமர் என்ற பெருமையை கேப்ரியல் அட்டல் பெற்றார். கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேப்ரியல் அட்டல் பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராவும், அரசின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்.
இப்போது அவருக்கு முன் உள்ள சவால் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அதில் அவர் பிரான்ஸ் அரசாங்கத்தை வழிநடத்துவார். பிரான்ஸ் அரசாங்கத்தில் கேப்ரியல் அட்டல் வேகமாக உயர்ந்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரான்ஸ் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசகராக இருந்தார். 34 வயதான கேப்ரியல் அட்டல் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஓய்வூதியம் மற்றும் குடியுரிமை சட்டத்தில் அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்களால் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நேரத்தில் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமனம் செய்துள்ளதால் மக்கள் மத்தியில் தன் மீதுள்ள கோபம் குறையும் என நினைத்து இந்த நடவடிக்கையை இமானுவேல் மேக்ரான் எடுத்துள்ளார் என பலர் கூறுகின்றனர்.
இந்தியாவில் குடியரசு தலைவரை விட பிரதமருக்கு தான் அதிக அதிகாரம் உண்டு. ஆனால் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரதமரை விட அதிபருக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…