தண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தண்ணீர் பிரச்சனை சர்வதேச தலைப்பு செய்தியானது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
  • தற்போது ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்
  • தண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனை ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ அவரது சமூக வளைத்ததில் தண்ணீர் பிரச்னையை குறித்து பதிவிட்டுருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவைக் கடுமையாக ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம் இதனால் மக்கள் அவதிக்குள்ளானார்.

ஆஸ்திரேலிய அரசு தண்ணீரை பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. இரண்டு வாளி தண்ணீர் கொண்டு தான் வாகனங்களைக் கழுவ வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இதனை மீறுபவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் நடவெடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தனி நபருக்கு 150 அமெரிக்க டாலரும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலரும் விதிக்கப்படும் என தெரிவித்தது. அதே நேரம் வெப்பமும் கடுமையாக அங்கு அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பத்தின் காரணமாகக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இதற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

2 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

4 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

5 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

6 hours ago