பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சாண்டி மாஸ்டர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவரது நடனத்திறமையால் பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, காலா மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ் என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் ரேபா ஜான் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் 100 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சாண்டி மாஸ்டர் டோரோத்தி சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது சாண்டிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…