நம் மனம் சந்தோஷமாக இருக்கும்போதோ அல்லது ஏதேனும் குழப்பமான மனநிலையில் இருக்கும்போதோ பெரும்பாலானோர் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நாம் செல்கையில் இறைவனை வணங்கி விட்டு திரும்பி வரும்போது வாசலில் சிலர் தர்மம் கேட்பதற்காக இருப்பார்கள்.
ஆனால், நம்மில் பலர் கோவிலில் இறைவனை வணங்கிவிட்டு இறைவனிடம் வரம் வாங்கி விட்டோம். இனி தர்மம் செய்தால் நமது வரம் அவர்களுக்கு சென்று விடும் அதனால் நமக்கு கோவிலுக்கு சென்ற எந்த பலனும் கிடைக்காது என தவறாக நினைத்துக்கொண்டு தர்மம் செய்வதை தவிர்த்து வருகின்றோம்.
இது தவறான மூடநம்பிக்கை ஆகும். ஏனெனில் நாம் இறைவனை வணங்கி விட்டு வெளியில் உள்ளவர்களுக்கு லட்ச ரூபாய் நன்கொடை அளித்து விட்டு நாம் இவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறோம், நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என நினைத்துக்கொள்வது மூடநம்பிக்கை. ஒருவருக்கு உதவி தேவை என்றால் அதனை நம்மால் செய்ய முடியும் என்றால் அதனை உரிய நேரத்தில் எவ்வித பாகுபாடுமின்றி செய்து கொடுக்க வேண்டும். நாம் செய்யும் உதவி அல்லது தர்மம் சரியான முறையில் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கவனிக்க வேண்டும். அதை தவிர்த்து வெறும் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு நாம் தர்மம் செய்து விட்டோம். நமக்கு புண்ணியம் கிடைத்துவிடும் என நினைப்பது தவறு.
நீங்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது, ஒரு முதியவர் பசிக்காக சாப்பாடு கேட்கிறார் எனும்போது நாம் இல்லை நான் கோவிலுக்கு சென்று வந்து விட்டேன். அதனால் இப்போது தர்மம் செய்ய மாட்டேன். எனக் கூறுவது தவறு. ஒருவர் பசிக்கிறது என்றால் அந்த பசியை உடனே தீர்ப்பது தான் தர்மம்.
அதுவே நம் பாவ புண்ணிய கணக்குகளில் வந்துசேரும். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவராசிக்கும் தங்களது கரும பலன்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விதமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். அவர்களின் பூர்வ ஜென்ம பலன்களின்படி இந்த ஜென்மம் வாழ்வு அமைகிறது அதனை நல்ல எண்ணங்கள் கொண்டு நன்மைகள் மேம்பட நாம் முயற்சி செய்ய வேண்டும்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…