தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன் ,ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரீலீஸ் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சமீபத்தில் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ரகிட ரகிட பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜகமே தந்திரம் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளி வராத நிலையில் தற்போது தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். விவேக் வரிகள் எழுத அனிருத் அவர்கள் பாடி பட்டைய கிளப்பியுள்ளார் . தனுஷ் ரசிகர்களுக்கு இந்த பாடல் சூப்பர் தீபாவளி ட்ரீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…