US Election 2020 LIVE : ஒபாமாவின் சாதனையை முறியடித்த ஜோ பைடன்

Published by
Venu

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பைடன் அதிக வாக்குகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி  நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை  பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது.டொனால்ட் ட்ரம்ப் 214 சபை ஓட்டுகளை  பெற்றுள்ளார்.டிரம்ப் வெற்றி பெற 56 வாக்குகள் தேவைப்படுகிறது.

அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் பதவியை வெல்வதற்குத் தேவையான  இடங்கள் 270 ஆகும்.  இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். அவர் 70 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.அதாவது , ஜோ பைடன் இந்த தேர்தலில் 50.4% வாக்குகளை பெற்றுள்ளார்.இவர் பெற்ற வாக்குகள் 72,075,757 ஆகும்.இதுவரை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்களில்  முன்னாள் அதிபர் ஒபாமா பெற்ற வாக்குகள் தான் சாதனையாக இருந்து வந்தது.தற்போது அந்த சாதனைகளை பைடன் முறியடித்துள்ளார்.

கடந்த 2008 -ஆம் நடைபெற்ற அமெரிக்க  அதிபர் தேர்தலில்  ஒபாமா 69,498,516 பெற்ற வாக்குகள் தான் சாதனையாக இருந்து வந்தது.தற்போது ஒபாமாவை விட பைடன் 2577241 வாக்குகள் பெற்றுள்ளார்.தற்போதைய தேர்தலை பொறுத்தவரை டிரம்ப் 47.97% வாக்குகள் பெற்றுள்ளார்.அதாவது 68,600,187 வாக்குகள் பெற்றுள்ளார்.இவரும் ஒபாமாவின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப்  மூன்று மாநிலங்களில் வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

18 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

49 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago