ChessWorldCup
உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் மோதிய டை-பிரேக்கர் சுற்றில், மேக்னஸ் கார்ல்சன் 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, உலகக்கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அந்த போட்டியானது முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காயுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காயுடனும் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர்.
அதன்படி, பிரக்ஞானந்தா முதலில் e4-க்கு தனது காயை நகர்த்த, கார்ல்சன் e5-க்கு நகர்த்தினார். பிறகு சிறிது நேரம் வேகமாக இருவரும் தங்களது காய்களை நகர்த்தினர். விளையாடும் நேரம் 10 நிமிடமாக குறைந்ததும், மிகவும் நிதானமாக காய்களை நகரத்தினர். இறுதியில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார்.
இதனால் டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இருவரும் மீண்டும் களமிறங்கினர். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஏற்பட்டது. இருந்தும் ஆட்டம் தொடக்கம் முதலே கார்ல்சன் வேகமாக காய் நகர்த்தினார். இறுதியில் இந்த இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
இதனால் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தோல்வியடைந்த, தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…