அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களேஅதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அதனை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 85 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும் என தெரிவித்த டிரம்ப், இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், கடந்த முறை தேர்தலில் உளவு பார்த்தார்கள் எனவும், இந்த முறை மின்னஞ்சல் வாக்குகளைத் திருட முயல்கிறதாக கூறிய அவர், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்று ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் அமெரிக்காவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…