சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில், கடந்த 2018-ம் ஆண்டில் மாநாடு படம் உருவாகிறது என்றும், 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், படப்பிடிப்பு கூட துவங்காமல் இருந்தது. அதன் பின், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. அதன் பின்னும் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவில்லை. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நீக்கப்படுவதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். அதனை தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் ஆகியோரும் இப்படத்தில் சிம்புவுடன் நடிக்கின்றனர். தொடர்ந்து இப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பதால், சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…