isrel war - congress committee meeting [File Image]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து 4வது நாளாக நடந்து வரும் போருக்கு மத்தியில், நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில், இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
காசா பகுதியில் நுழைந்துள்ள ஹமாஸ் குழு, இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் குறைந்தது 700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேலின் எதிர்த்தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மூன்று நாட்கள் கடந்த நிலையில், இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 தாண்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசைக்கப்பட்ட நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் வெடித்துள்ள போரின் விளைவாக, 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
தங்களது நிலத்தை பாதுகாப்பது, சுயாட்சி செய்வது, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வது உள்ளிட்டவை பாலஸ்தீனர்களின் உரிமை என்ற எங்களது நீண்டகால ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…