போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார். இதனையடுத்து, உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்ப தயார் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது, போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் தாக்குதல் தொடரும் எனவும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…