நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள 10 உறுப்புகளில் 200- க்கும் மேற்பட்ட நோய் அறிகுறிகள் உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பரவி வர கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் தினமும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், உலகம் முழுதும் உள்ள பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 56 நாடுகளில் இருந்து 3,762 தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள முடிவில் நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் உறுப்புகளில் மொத்தம் 203 நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோயாளிகளிடம் அதிக அளவில் நடுக்கம், தோல் அரிப்பு, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், பாலியல் செயலிழப்பு, இதய துடிப்பு, சிறுநீர் கட்டுப்பாடு சிக்கல், நினைவாற்றல், இழப்பு, மங்கலான பார்வை வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதே நோயாளிகளிடம் சுவாச செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு தற்பொழுது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…