தடுப்பூசி குறித்து தவறான ட்வீட் செய்தால் நீக்கம் – ட்விட்டர்..!

Published by
murugan

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. கொரோனா தொற்றுநோயை தடுக்க தடுப்பூசி போட தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசியை போடும் பணி பிரிட்டனில் தற்பொழுது தொடங்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவிலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை தனது தளத்திலிருந்து நீக்குவதாக சமூக ஊடக தளமான ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ட்விட்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை ட்விட்டர் தளத்திலிருந்து அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் விளைவுகள் குறித்த பதிவுகள், தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ பயன்படுத்தப்பட்டது என்று ஆதாரமற்ற தகவலை வெளியிடுவது போன்றவற்றை நீக்குவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் வரும் புதன்கிழமை (டிசம்பர் 23) முதல் செயல்படுத்தும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை நீக்குவதாக பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

27 minutes ago
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

40 minutes ago
நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

60 minutes ago
சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

2 hours ago
அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

11 hours ago
கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

11 hours ago