ஆலியா பட் அவர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயரை கூறியுள்ளார் RRR படத்தின் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி கூறியுள்ளார்.
எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ஆலியா பட் அவர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயரை கூறியுள்ளார் RRR படத்தின் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி. அவர் கூறியதாவது, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் போன்ற இரண்டு திறமையான நடிகர்களினிடையில் நிற்க கூடிய ஒரு நடிகை சீதாவின் கதாபாத்திரமாக எனக்கு தேவை. இது ஒரு ட்ரை ஆங்கிள் லவ் ஸ்டோரி இல்லை என்றும். ஒரு அப்பாவி, பாதிக்கப்பட கூடியவர், ஆனால் மிகவும் நெகிழக்கூடியவர் போன்ற பல உணர்வுகளுடன் கூடியவர் தான் சீதாவின் கதாபாத்திரம். அதனால்தான் ஆலியா பட்டிடம் நான் இந்த கதையை கொண்டு சென்றதற்கான காரணம் என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…