உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களா நீங்கள்…? மருந்து இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

Published by
Rebekal

உயர் ரத்த அழுத்தம் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உள்ள ஒரு மிகப் பெரிய பாதிப்பாக உள்ளது. இந்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக பலர் குறைந்த வயதில் சீக்கிரமாகவே உயிரிழக்க நேரிடுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதை கண்டறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தில் மட்டுமல்லாமல் இயற்கையான முறையிலும் சரி செய்யலாம். அதற்கான சில வழிமுறைகளை நாம் இன்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்

சாதாரணமாகவே மனிதர்கள் ஒரு நாளுக்கு 2,300 மில்லி கிராமுக்கு மேல் சோடியம் பயன்படுத்தக் கூடாதாம். அதிகப்படியான சோடியம் உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாம். மேலும் சோடியம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் பொழுது பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணமாகவும் அமையுமாம். எனவே தினமும் நமது உணவுகளில் சோடியம் உட்கொள்ளுதலை குறைத்துக் கொள்ளும் பொழுது இரத்த அழுத்தத்தை 5 முதல் 6 மில்லி மீட்டர் வரை குறைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக உப்பில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

பொட்டாசியம் உட்கொள்ளுதலை அதிகரித்தல்

உயர் இரத்த அழுத்தத்துடன் போராடக்கூடிய மக்கள் பொட்டாசியம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பொட்டாசியத்தை அதிகளவு நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது, இது நரம்பில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. எடுத்துக்காட்டாக பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, வாழைப்பழம், பாகற்காய், தயிர், வெள்ளை பீன்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் பொட்டாசியம் காணப்படுகிறது.

உடற்பயிற்சி

ஒவ்வொரு மனிதனுமே தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த உடற்பயிற்சி நமது இதயத்தை வலுப்படுத்த உதவுவதுடன் தமனிகளில் இருக்கக்கூடிய அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்

 

இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளில் 16 சதவீதத்தினர் குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்களாம். எனவே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் புகைபிடிப்பதையும், குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

Published by
Rebekal

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

29 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

1 hour ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago