தனுஷின் கர்ணன் படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜின் பிறந்தநாளான மார்ச் 7-ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஏப்ரல் 9-ம் திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.மேலும் கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பாடல்களை கண்ட ரசிகர்களைடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.எனவே படத்தினை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் .இந்த நிலையில் கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியிட உள்ளதாக நேற்று முன்தினம் தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனுஷின் கர்ணன் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் தனுஷின் கர்ணன் பட டீசரை மார்ச் 7ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏனெனில் அன்று தான் கர்ணன் பட இயக்குனரான மாரி செல்வராஜின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே கூடுதலாக கர்ணன் படத்தின் டீசர் ஞாயிறன்று வெளியாகவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…