மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் லாலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில், படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட படாவிட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் இதற்கான பணிகளில் கலைப்புலி தாணு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…