சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள தனது 40-வது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி கூட்டத்தில் ஒருத்தன் பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40-வது படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் .இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவின் 40-வது படத்தினை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.அதாவது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் ,அதனை ஒரே கட்டமாக ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதன் பின் படத்தினை சுதந்திர தினத்தை முன்னிட்டோ அல்லது ஆயுத பூஜையை முன்னிட்டோ வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை முடித்த பின்னர் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் , சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…