காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.??

Published by
பால முருகன்

காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 

கடந்த 2004 – ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.

குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.

காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் இப்பொது வரை ரசிகர்களுக்கு மத்தியில் மறக்கமுடியாத படமாக தான் உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

முதன் முதலாக இந்த படத்தின் கதையை இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிகர் தனுஷிடம் தான் கூறினாராம் அவர் கால்ஷீட் காரணமாக வேண்டாம் என்றவுடன், சாந்தனுவிடம் கூறியுள்ளார். அவரும் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகு பரத்திற்கு கதை சென்று உடனே பரத் நடித்தாராம்.

Published by
பால முருகன்

Recent Posts

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

30 minutes ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

1 hour ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

2 hours ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

2 hours ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

3 hours ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

3 hours ago