கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரக்கூடிய இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்மணிதான் செலினா. இவர் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஏற்கனவே வில்லியம் ஜேம்ஸ் என்பவரை காதலித்து விட்டு அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிற நிலையில், கடந்த ஒரு வாரமாக அவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் தீவிரமாக இவரை தேடி வந்துள்ளனர். ஒரு வாரம் ஆகியும் செலினா குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவரது முன்னாள் காதலனான வில்லியம் ஜேம்ஸிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவரது வீட்டையும் பரிசோதனை செய்துள்ளனர். அப்பொழுது அவரது சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த ஃபிரிட்ஜில் செலினா கழுத்து மற்றும் முகத்தில் படு காயங்களுடன் பிணமாக அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் வில்லையாம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதுடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…