bomb blast [file image
பாகிஸ்தானின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் இன்று பாதுகாப்பு படையினருடைய ரோந்து வாகனம் அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படு காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்ய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்கள்.
அவர்கள் விசாரணை செய்த முதற்கட்ட விசாரணையில் வெடிக்கப்பட்ட அந்த குண்டு படையினருடைய 2 ரோந்து வாகனத்திற்கும் நடுவே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பு படையினரை தாக்க வைக்கபட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…