தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், குட்டி பட இயக்குநரான மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குவதாகவும், ஹன்சிகா மோத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் , ராட்சஷன் பட இயக்குநரான ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி தயாரிக்கும் ஒரு படம் மற்றும் இந்தியில் ‘அத்ராங்கி ரே’ ஆகிய படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனுஷின் உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி மற்றும் குட்டி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜோடி 2011ல் வெளியான மாப்பிள்ளை படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…