டான் படத்தின் படப்பிடிப்பின்போது சிவகார்த்தியேன் ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தார்கள் அதற்கான புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகிய மூன்று காமெடி நடிகர்களும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர் .
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது . இந்த நிலையில் தற்போது டான் படத்தின் படப்பிடிப்பின்போது சிவகார்த்தியேன் ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தார்கள் அதற்கான புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…